tamilnadu

கோட்சே தேசபக்தர் அல்ல! பின்வாங்கியது பாஜக பிரக்யா தாகூரின் இழி கருத்துக்கு சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம்

புதுதில்லி, மே 16-தேசத் தந்தை மகாத்மா காந்தியை சுட்டு படுகொலை செய்த ஆர்எஸ்எஸ் இந்துத்துவா பயங்கரவாதியான கோட்சேவை, ஒரு தேசபக்தர் என்று புகழ்ந்து பேசிய பாஜகவின் போபால்நாடாளுமன்றத் தொகுதி வேட்பா ளரும், மதவெறி சாமியாருமான பிரக்யா தாகூரின் கருத்து ஏற்கத் தக்கதல்ல என்று பாஜக மேலிடம் வேறு வழியின்றி பின்வாங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மிகத் தீவிரமான மதவெறி கருத்துக்களை பாஜக கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் நடைபெற உள்ள நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச் சாரத்தையொட்டி, மக்கள் நீதி மய்யதலைவர் கமலஹாசன், இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்றும், அவரது பெயர் கோட்சே என்றும், தேச பிதாவை படுகொலை செய்தவர் கோட்சே என்றும் பேசினார். தமி ழகத்தில் உள்ள பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மதவெறியர்கள் மட்டுமின்றி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அதிமுக அமைச்சர்களும் கூட கமலின் கருத்துக்களை எதிர்ப்பதாகக் கூறி மதவெறிக்கு வால் பிடித்தனர். கமலின் கருத்து சரியானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறின. மேலும் தேசத் தந்தை மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோட்சே ஒரு இந்துத்துவா மதவெறி பிடித்த பயங்கரவாதி என்றுஎதிர்க்கட்சிகள் உறுதிபட முழக்க மிட்டன.பிரக்யாவும் ஒரு பயங்கரவாதிஇந்நிலையில், காந்தியை படுகொலை செய்த கோட்சே ஒரு தேச பக்தர் என்று மதவெறி சாமி யாரும், பாஜக போபால் தொகுதி வேட்பாளருமான பிரக்யா தாகூர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இது கடுமையான கண்டனக் கணைகளை உருவாக்கியது. காந்தியைப் படு கொலை செய்த கோட்சேவை ஆர் எஸ்எஸ் மற்றும் பாஜக தேசபக்தர் என்று கூறுவது ஒட்டுமொத்த இந்திய மக்களின் உணர்வலைகளை இழிவுபடுத்துவதாகும் என்றும் பாஜக நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலை வர்கள் கூறினர்.காந்தியை படுகொலை செய்தபயங்கரவாதியை தங்கள் கையில் வைத்திருந்த ஆர்எஸ்எஸ், இன்றைக்கும் கூட குண்டு வெடிப்பு வழக்குகளில் குற்றம்நிரூபிக்கப்பட்டுள்ள பயங்கர வாதியை தனது வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது; இத்தகைய காரணங்களால்தான் அன்றைக்கு சர்தார் வல்லபாய் படேல் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்தார் எனவும் யெச்சூரி குறிப்பிட்டுள்ளார்.பாஜக மேலிடம் பதற்றம்இந்நிலையில், தங்களது கட்சியின் வேட்பாளர் பிரக்யா தாகூரின் மேற்கண்ட இழி கருத்து தங்களுக்கே ஆபத்தாக முடியும் என்பதை உணர்ந்த பாஜக மேலிடம் அவசர அவசரமாக, பிரக்யா தாகூரின் கருத்து கட்சியின் கருத்தல்ல என்றும், அக்கருத்தை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளது. பாஜக செய்தித்தொடர்பாளர் ஹிதேஷ் பாஜ்பாய் செய்தியாளர்களைச் சந்தித்து, மகாத்மா காந்தியை படுகொலை செய்தவர் தேசப்பக்தர் அல்ல என்றும்பிரக்யா தாகூர் தமது கருத்துக்காக கண்டிக்கப்பட்டுள்ளார் என்றும் அதைத் தொடர்ந்து அவர் மன்னிப்புக் கேட்டுவிட்டார் என்றும் தெரிவித்தார்.இதனிடையே பாஜக, பிரக்யாதாகூர் போன்ற குண்டுவெடிப்பு பயங் கரவாதியை வேட்பாளராக்கியுள்ள இழிசெயலுக்கும் நாட்டு மக்களிடையே மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.(பிடிஐ செய்திகளுடன்)