பெங்களூரு:
கர்நாடக மாநிலம் கடாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கலகப்ப பண்டி. பாஜக எம்எல்ஏஆவார். இவர், பெண் ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபடும் வீடியோ ‘தேன்பொறி’ என்ற பெயரில் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மேலும்கூறப்படுவதாவது: கர்நாடகத்தைச் சேர்ந்த ராகவேந்திரா என்பவர், பிரபலங்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி,அதன் மூலம் காரியம் சாதித்துக்கொள்பவர் என்று கூறப்படுகிறது.அந்த வகையில், பாஜக எம்எல்ஏகலகலப்ப பண்டி, பாலியல் சபலம் கொண்டவர் என்பதை அறிந்து, அவரின் விருப்பத்தை ராகவேந்திரா நிறைவேற்றி வந்துள்ளார். அத்துடன் பெண்களுடன் கலகப்ப பண்டி தனியாக இருந்ததை வீடியோவும் எடுத்து வைத்துள்ளார்.
சமீபத்தில் அந்த வீடியோக் களைக் காட்டி, பாஜக எம்எல்ஏகலகப்ப பண்டியிடம், ராகவேந் திரா பணம் கேட்க, எம்எல்ஏ பண்டியோ, முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராகவேந்திரா, கலகப்பபண்டியின் பாலியல் வீடியோவை, ‘தேன்பொறி’ என்ற பெயரில், இணையதளத்தில் வெளியிட்டு, பழிவாங்கியுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த கலகலப்ப பண்டி, வீடியோவைவெளியிட்டவர் மீது நடவடிக்கைஎடுக்கக் கோரி, மத்திய குற்றப் பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். போலீசாரும் அதன்மீது நடவடிக்கை எடுத்து, ராகவேந்திரா என்பவரையும், பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.