tamilnadu

img

5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு

தமிழக அரசின் அநீதியான அறிவிப்பு: மாணவர்கள் கடும் எதிர்ப்பு

சென்னை, செப்.14- தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதற்கு மாணவர்கள், கல்வியா ளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். தற்போது தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாநில வழி கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி அளிக்கப்படுகிறது. கட்டாய தேர்ச்சி யினால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு வந்தது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்திலும் சில மற்றங் களை மத்திய அரசு மேற்கொண் டது. அதன்படி, இலவச மற்றும் கட்டா யக் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய் தது. இதற்கான மசோதாவும் மத்திய அரசால் தாக்கல் செய் யப்பட்டது. ஆனால் நடைமுறை யை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என அறி வித்திருந்தது.

இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்பு களுக்கு பொதுத் தேர்வு நடத்தப் படும். அதில் தேர்வாகாத மாண வர்களுக்கு தேர்வு முடிவு வெளி யிட்ட நாளில் இருந்து இரண்டு மாத காலத்துக்குள் மறு தேர்வு நடத் தப்படும். அந்தத் தேர்விலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பி லேயே படிக்க வேண்டும். தேர்ச்சி அடையாத மாணவர்களை பள்ளி யை விட்டு வெளியேற்ற பள்ளி களுக்கு உரிமையில்லை. அதே போன்று கட்டாய கல்வி சட்டத் தின்படி 5ஆம் வகுப்புக்குக் கீழ் உள்ள மாணவர்களுக்கு கட்டா யத்தேர்ச்சி உண்டு”என்று தெரி விக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுத் தேர்வு நடத்துவதற்கான நட வடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி இயக்குநர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேபோன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக தமிழக அரசு மற்றொரு ஆணையை பிறப்பித் துள்ளது. இதுவரை பத்தாம் வகுப்பு மாணவர்கள் மொழி பாடங்களில் முதல் தாள், இரண்டாம் தாள் என இரு தேர்வுகள் எழுதி வந்த நிலை யில், இனி அவை ஒரே தேர்வாக நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது 2019-2020ஆம் கல்வியாண்டு முதல் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி பாடங்களுக்கு இரண்டு தாள்களாக தேர்வு எழுதும் முறை ரத்து செய் யப்பட்டு இனி ஒரே தாளாக தேர்வு நடைபெறும். இதன் மூலம் மொழிப் பாட ஆசிரியர்கள் ஒவ்வொரு தேர்வின் போதும் விடைத்தாள் மதிப்பீட்டுக்காக அதிகநாட்கள் செலவிடும் நிலைமாறி கற்பித்தல் மற்றும் கல்வி மேம்பாட்டு பணியில் அதிக நேரம் செலவிட ஏதுவாக இருக்கும் என்று சப்பைக் கட்டு கட்டி யுள்ளது. ஒரே தாளாக தேர்வு எழுது வதன் காரணமாக மாணவர்களின் தேர்வு காலம் குறைக்கப்படுவதால் அவர்களின் கவனச்சிதறல் மற்றும் மன அழுத்தம் பெருமளவில் குறையும். விடைத்தாள் மதிப்பீட்டு நாட்கள் குறைக்கப்படுவதால் விரைவில் தேர்வு முடிவுகள் வெளி யிட வாய்ப்பு ஏற்படும் என்றும் பள் ளிக்கல்வித்துறை தன்னிச்சையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு இதே முயற்சி களை தமிழக அரசு மேற்கொண்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்ற நடைமுறை அமலில் இருக்க வேண்டும்; மொழிப் பாடங் களில் இரண்டு தாள்கள் அவசியம் நீடிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசி யல் இயக்கங்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வலி யுறுத்தினர்.

மாணவர்கள் கடும் எதிர்ப்பு

“கடந்த 2015 ஆம் ஆண்டு கணக் கெடுப்பின்படி 6 வயது முதல் 18 வயதிற்குள் பள்ளியை விட்டு விலகி யவர்கள் (இடைநிற்றல்) 6.2  கோடி குழந்தைகள் என தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவு அறிக்கையின் வழி அறிய முடிகிறது. இத்தகைய சூழலில் கல்வி நிலையங்களை நோக்கி மாணவர்கள் வருவதற்கான திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டுமே தவிர, இருக்கும் மாணவர்களைப பொதுத் தேர்வு என்கிற பெயரில் விரட்டி கல்வி உரிமையைப் பறிக்கும் வேலையை செய்யக் கூடாது. ஆனால் தேசியக் கல்விக் கொள்கை 2019 பள்ளிக் கல்வி குறித்த அத்தியாயத்தில் 3, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் கண்ணசைவின்படி நடக்கும் தமிழக அதிமுக அரசு, மாணவர் விரோத தேசியக் கல்விக் கொள்கையை சிர மேற்கொண்டு நடைமுறைப் படுத்துவதற்கான பணிகளை முடுக்கியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை 2019, வரைவு அறிக்கையே இன்னும் இறுதி படுத்தப் படாத நிலையில் அதன் ஒவ்வொரு ஷரத்தையும் தமிழகத்தில் அமலாக்கும் வேலையை தமிழகப் பள்ளிக் கல்வித்துறை தொடங்கி யுள்ளது” என இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஏ.டி. கண்ணன், செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் சாடியுள்ளனர்.

அறிவியல் இயக்கம்
 

 தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர். எஸ். தினகரன், பொதுச் செயலாளர் எஸ்.சுப்பர மணி விடுத்துள்ள அறிக்கையில், “கற்பித்தல், கற்றல் ஆகி யவை முழுமையாக நடந்த பின்னரே தேர்வுகள் நடைபெற வேண்டும் என்பது பொதுவான விதி. அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகள் என எல்லாவற்றிலும் முழுமையான கற்றல் - கற்பித்தல் நடைபெறுவதற்கு பல்வேறு தடைகள் உள்ளன. இத்தகைய தடைகளை களைவதற்கு பள்ளிக் கல்வி அமைச்சர் பின்லாந்து பயணம் உதவும் என்று பலரும் நம்பி னார்கள். ஆனால் பின்லாந்து நாட்டில் இருந்து திரும்பிய தும் குழந்தைகளின் உண்மையான கற்றலுக்கு விரோதமான தும் அறிவியல் பூர்வமற்றதுமான நடைமுறையை தமிழ் நாடு அரசு தொடங்கியுள்ளது. ஆண்டு இறுதியில் மனப்பாடத் தேர்வு முறை தவறு எனக் கண்டறிந்து கைவிடப்பட்டது. அதற்கு மாறாக, இப்போது, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு குழந்தைகளின் மீதான தேர்வு என்னும் நடைமுறையை வேகமாக முன்னெடுப்பது இதுவரை நாம் கல்வியில் பெற்ற வளர்ச்சியை பின்னுக்கு தள்ளவே பயன்படும். தேர்வுகள் குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகரிக்கவே பயன்படும். உண்மையான கற்றல் நடைபெற பயன்படாது. எனவே ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொது தேர்வு என்ற முடிவை தமிழ் நாடு அரசு உடனடியாக கைவிடுதல் அவசியம் என்று கூறியுள்ளனர்.