புதுதில்லி:
2021-ஆண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (GDP) மைனஸ்5 சதவிகிதமாக (-5) வீழ்ச்சி அடையும் என்று“கோல்டுமேன் சாக்ஸ்” (Goldman Sachs)ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தைக் கடந்து விட்டது. இதுவரை 3 ஆயிரத்து 163 பேர் பலியாகி இருக்கின்றனர். கொரோனாதொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர நான்காவது முறையாக மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.மாநிலங்களின் நிலைமைக்கு ஏற்ப,ஆங்காங்கே தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை. பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கு மூலதனப் பொருட்கள் இல்லை. எனவே, பழையபடி 100 சதவிகிதம் தொழில்கள் நடைபெற இன்னும் சில மாதங்களாகும் என்பதே யதார்த்தமாக உள்ளது.
இந்நிலையில்தான், 2020-21 நிதியாண் டின் ஜூன் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி,மைனஸ் 45 சதவிகிதம் என்ற அளவிற்குசரிவைச் சந்திக்கும் என்று “கோல்டுமேன் சாக்ஸ்” நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. முன்பு, ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மைனஸ் 20 சதவிகிதமாகவும், முழு நிதியாண்டில் மைனஸ் 4 சதவிகிதமாகவும் ஜிடிபி வளர்ச்சி இருக்கும் என்று சாச்ஸ் மதிப்பிட்டிருந்தது.
ஆனால் தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் தனது மதிப்பீட்டைக் குறைத்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முடிவில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு மைனஸ் 5 சதவிகித வளர்ச்சியையே பெறும் என்று தெரிவித்துள்ளது.செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் ஜிடிபிவளர்ச்சி காண வாய்ப்பிருப்பதாக கூறும்“கோல்டுமேன் சாச்ஸ்”, 2021-ஆம் நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் 14 சதவிகிதம், மார்ச் காலாண்டில் 6.5 சதவிகிதம் என்றுஇந்த வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது.மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமனின் ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங் கள் உடனடியாக பொருளாதாரத்தில் எதிரொலிக்காது என்று தெரிவித்துள்ள கோல்டுமேன் சாச்ஸ், “உலக வங்கி கணிப்பின் படி,மொத்த ஜிடிபி விகிதத்தில் 10 சதவிகிதம்தான் ஊக்குவிப்பு சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது எந்தளவுக்கு கைகொடுக்கும் என தெரியவில்லை” என்று கூறியுள்ளது.