ஆட்டோ மொபைல் துறையில் 3.5 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 3.5 லட்சம் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. பிஸ்கெட் முதல் சோப் வரை முறைசாராத் துறையில் மேலும் லட்சக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். கிராமப்புற இந்தியாவில் மக்களின் வாங்கும் திறன் வெகுவாக குறைந்துள்ளது. தொழில்துறை துவங்கி விவசாயத் துறை வரை அனைத்து துறைகளிலும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியா வருந்துகிறது. ஆனால் பிரதமர் இதற்கு பொறுப்பேற்க மறுக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலம் சிகார் போலீசார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மீது நடத்திய தாக்குதல் குறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கட்சியின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மாநில முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அம்ராராம், பீமாராம் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். எந்தவிதமான வாரண்டும் இல்லாமல் கட்சி அலுவலகத்திற்குள் போலீசார் நுழைந்து தலைவர்களை கைது செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம்.