tamilnadu

img

நிதிஷ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் லாலு கட்சியில் இணைந்தார்... 

பாட்னா 
வடமாநிலங்களில் ஒன்றான பீகாரில் பாஜக கூட்டணியுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் ஆட்சி செய்து வருகிறார். இவரது அமைச்சரவையில் பணியாற்றிய ஷியாம் ராஜக் என்பவர் சமீபத்தில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் ஷியாம் ராஜக் தனது தாய் கழகமான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியில் இன்று சேர்ந்தார். இதற்கு முன்  ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் தீவிர விசுவாசியாகவும், லாலுவின் அமைச்சரவையில் அமைச்சராகவும் பணியாற்றிய ஷியாம் ராஜக் 2009-ம் ஆண்டு கட்சிக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விலகினார். அதன்பின் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்து அங்கும் அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது.