tamilnadu

img

16 ஆண்டுகளில் முதல் முறையாக நஷ்டத்தில் ‘டைட்டன்’ நிறுவனம்...

புதுதில்லி:
டாடா குழுமத்தைச் சேர்ந்த ‘டைட்டன்’ நிறுவனம், கடந்த 16 ஆண்டுகளில் முதல் முறையாக நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. 

நகை, கடிகாரம், மூக்குக் கண்ணாடி, தலைக்கவசம், வாசனைப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்து வரும், டைட்டன் நிறுவனம், ‘தனிஸ்க்’ என்ற பெயரில் நகை விற்பனையையும் மேற்கொண்டு வருகிறது. நகை விற் பனை மூலமாக இந்நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுகிறது. இந்நிலையில், கொரோனா பொதுமுடக்கத்தையொட்டி ஏப் ரல், மே மாதங்களில் நகைக் கடைகள் மூடப்பட்டு விற்பனை முற்றிலும் முடங்கியதால், ஏப்ரல் - ஜூன்
காலாண்டில் ரூ. 297 கோடி நஷ் டம் ஏற்பட்டுள்ளதாக டைட்டன் நிறுவனம் கூறியுள்ளது.

2019-ஆம் ஆண்டில், இதே ஜூன் காலாண்டில் டைட்டன் நிறுவனம் ரூ. 364 கோடி லாபம் ஈட்டியிருந்தது. மார்ச் 30 உடன் முடிந்த காலாண்டில்கூட 21 சதவிகித வளர்ச்சியுடன் 356 கோடியே 79 லட்சம் ரூபாய் லாபத்தை டைட்டன் பெற்றது. ஆனால், தற்போது மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.விற்பனை வாயிலான வருவாயைப் பொறுத்தவரையில் ஏப் ரல் - ஜூன் காலாண்டில் ரூ. 1,368 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. இது 2019-ஆம் ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் கிடைத்த ரூ. 5,095 கோடி வருவாயை விட 73 சதவிகிதம் குறைவாகும்.

ஏப்ரல் - ஜூன் மாதங்களில் டைட்டன் நிறுவனத்தின் கடிகாரங்கள் பிரிவு வர்த்தகம் 90 சதவிகிதமும், நகை வர்த்தகம் 56 சதவிகிதமும், மூக்குக் கண்ணாடி வர்த்தகம் 80 சதவிகிதமும் சரிந் துள்ளது. இதனால் டைட்டன் நிறுவனத்தின் மொத்த வர்த்தகம் 74 சதவிகிதம் சரிந்து ரூ. 1,251 கோடிகுறைவான வருவாயே கிடைத்துள்ளது. டைட்டன் நிறுவனத்தின் பங்கு மதிப்பும் 3.57 சதவிகிதம் வரையில் சரிந்துள்ளது.