புதுதில்லி:
ஜம்மு - காஷ்மீரின் சிறப்புஅதிகாரம் ரத்து செய்யப் பட்டு, மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக தகுதிக் குறைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், அங்கு சென்றதாகவும், அவர் ஜம்மு - காஷ்மீர் மக்களுடன் கலந்துரையாடி, அவர்களுடன் ஒன்றாக உணவு உண்டதாகவும் செய்திகள் - புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
குறிப்பாக, காஷ்மீரில் வன்முறைச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் சோபியான் பகுதியில்தான், காஷ்மீரிகள் உடனான அஜித் தோவலின் கலந்துரையாடல் நடந்தது, அப்போது அந்த மக்களுடன் தோவல் ஒன்றாக மதியஉணவு உண்டார்; பாதுகாப்புப் படை வீரர்களுடனும் ஆலோசனை நடத்தினார் என்று அந்த செய்திகள் தெரிவித்தன.காஷ்மீர் மக்கள் இயல்பாகத்தான் இருக்கிறார்கள்; சிறப்பு அதிகாரம் பறிக்கப்பட்டதை அவர்கள் எதிர்க்கவில்லை என்று வெளியுலகுக்கு காட்டும் விதமாக, அனைத்து ஊடகங்களிலும் இந்தச் செய்திகள் பரப்பப் பட்டு வருகின்றன.இந்நிலையில், அஜித் தோவலின் காஷ்மீர் பயணத்தை, காங்கிரஸ் மூத்ததலைவரும், காஷ்மீர் முன் னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் கடுமையாக விமர்சித்துள்ளார். “அஜித் தோவலுடன் சாப்பிடுபவர் கள் காஷ்மீரிகள் அல்லர்; அவர்கள் பணம் வாங்கிய நடிகர்கள்; பணம் தருபவர்களை அந்த நடிகர்கள்ஆதரிக்கத்தானே செய்வார் கள்; பணம் கொடுத்து யாரையேனும் அழைத்துச் சென் றால், அவர்கள் காஷ்மீரிகள் ஆகி விடுவார்களா?” என்று சாடியுள்ளார்.