பாட்னா
நாட்டின் வடக்கு பகுதி மாநிலமான பீகாரில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 169 பேர் பலியாகியுள்ளனர். 12, 300 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இன்னும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பீகாரில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும், மாநில அரசு மற்றும் மத்திய அரசு வரவிருக்கும் சட்டசபை தேர்தல் பற்றிய வேளைகளில் மட்டும் தான் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், வரும் 16-ஆம் தேதி முதல் பீகார் மாநிலத்தில் முழுஉரடங்கு விதிக்கப்படுவதாகவும், அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மக்கள் வெளியே நடமாடலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.