tamilnadu

img

தனியார் தேஜாஸ் ரயிலில் கட்டணக் கொள்ளை!

புதுதில்லி:
இந்தியாவில் பயணிகள் ரயில் சேவையைத் தனியார்மயமாக்கும் தீவிர முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டியுள்ளது. ஓராண்டுக்குள் 150 ரயில்களை தனியாருக்கு கொடுக்க முடிவுசெய்து, முதல் தனியார் தேஜாஸ் ரயிலை கடந்த4-ஆம் தேதி லக்னோ - தில்லி இடையே ஓட விட்டுள்ளது.இந்நிலையில், தேஜாஸ் ரயில் சேவை தொடங்கப்பட்ட 10 நாள்களில் இந்த ரயிலின்கட்டணம், ரயில்வே விதிகளை மீறி இரண்டுமடங்காக அதிகரிக்கப்பட்டிருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.1989-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டவிதிகளின்படி பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கட்டணங்களை மத்திய அரசு மட்டுமே நிர்ணயிக்க முடியும். ரயில்வேயின் அங்கமான ஐ.ஆர்.சி.டி.சி-யும் இதில் தலையிட முடியாது. ஆனால் அதையெல்லாம் மதிக்காமல் தன்னிச்சையாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ரயில்வே இயக்கும் சதாப்தி எக்ஸ்பிரஸ், தில்லியிலிருந்து லக்னோ வரையிலான 211 கிலோமீட்டர்களை 6 மணி நேரம் 35 விநாடிகளில் கடக்கிறது. அதில் ஏசி வகுப்புகளுக்கு 1,165 ரூபாயும் எக்ஸிகியூட்டிவ் வகுப்புகளுக்கு 1,855 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் தேஜாஸ் ரயிலில், தில்லியிலிருந்து லக்னோ செல்ல 6 மணி நேரம்30 விநாடிகள் ஆகிறது. இதில் ஏசி வகுப்புகளுக்கு 1,565 ரூபாயும், எக்ஸிகியூடிவ் வகுப்புகளுக்கு 2,450 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும்,இந்த தனியார் தேஜாஸ் ரயிலில் சிறியவர் களுக்கு எனத் தனியாகக் குறைந்த கட்டணம் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.