tamilnadu

img

வங்கிக் கணக்கில் இருந்தும் ரூ. 6 லட்சம் ‘அபேஸ்’.... அயோத்தி ராமர் கோவில் பெயரில் தொடரும் மோசடிகள்

அயோத்தி:
அயோத்தி ராமர் கோயில் கட்டும்பணிக்கான நன்கொடை வசூலில்ஆங்காங்கே மோசடிக் குற்றச்சாட்டுக் கள் எழுந்து வருகின்றன.உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரத்தில், நரேந்திர ராணா என்பவர்விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) பெயரில் அலுவலகம் திறந்து, ராமர் கோயில்பெயரில் பல லட்சங்களை சுருட்டினார். மீரட் மாவட்ட கிராமங்களில் வீடு, வீடாகவும் வசூல் வேட்டையாடினார். இதற்கென ரசீதுகளையும் அச்சிட்டிருந்தார். தற்போது அவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.இந்நிலையில், ராமர் கோவில் அறக்கட்டளை வங்கிக்கணக்கில் இருந்தே ரூ. 6 லட்சம், போலி காசோலை மூலம் கையாடல் செய்யப்பட்டு இருப்பது அம்பலமாகி இருக்கிறது.ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள ‘ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை’ பெயரில் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள ‘பாங்க் ஆப் பரோடா வங்கி’யில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

அந்த வங்கிக்கணக்கில் இருந்துதான், செப்டம்பர் 2-ஆம் தேதி ரூ. 2.5 லட்சமும், 3-ஆம் தேதி ரூ. 3.5 லட்சமும்போலி காசோலை அளித்து பெறப்பட்டுள்ளது. இதனிடையே, செப்டம்பர் 8-ஆம் தேதி 3-வது முறையாகவும் போலிகாசோலையைப் பயன்படுத்தி ரூ. 9 லட்சத்து 86 ஆயிரத்தை எடுக்க முயன்றபோதுதான் மோசடி வெளியே தெரிய வந்துள்ளது.“பெரிய தொகை என்பதால், அதை உறுதி செய்வதற்காக, வங்கியில் இருந்து அறக்கட்டளை நிர்வாகத்தை தொடர்பு கொண்டனர்; அப்போதுதான் எங்களுக்கே காசோலை மோசடிவிவகாரம் தெரியவந்தது” என்று அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் ‘அப்பாவி’யாக பேட்டியளித்துள்ளார். தற்போது போலீசார், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.