tamilnadu

img

கடற்படையிலும் பெண்களுக்குச் சம உரிமை... மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அடுத்த உத்தரவு

புதுதில்லி:
ராணுவ நியமனத்தில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாகவும், பெண்களுக்கு உயர்பதவிகள் வழங்கப்படுவதில்லை எனவும் உச்சநீதிமன்றத் தில் வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றம்கேள்வி எழுப்பியபோது, “பெண்களைதளபதிகளாக ஏற்றுக் கொள்ள, ஆண்ராணுவ வீரர்கள் மனதளவில் இன்னும்தயாராகவில்லை; அத்துடன், ராணுவத்தில் பெண்களுக்கு ஆபத்து அதிகம் என்பதால், உயர் பதவிகள் வழங்கமுடியாது” என்று மத்திய பாஜக அரசுதட்டிக்கழித்தது.ஆனால், “14 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய பெண் அதிகாரிகளுக்கு உயர் பதவி வழங்க வேண்டும்;ராணுவத்தில் பெண்களை நியமிப்பதற்கான உத்தரவை நிரந்தரமாக்க வேண்டும்” என்று கடந்த பிப்ரவரி 17 அன்று,வரலாற்றுத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. மத்திய அரசின் பாலினபாகுபாட்டு சிந்தனைக்கு கண்டனமும் தெரிவித்தது.இதனிடையே கடற்படையிலும் ஆண்களுக்கு இணையாக பெண்கள்நியமிக்கப்பட வேண்டும் என்ற மற் றொரு தீர்ப்பையும் செவ்வாயன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

“ஆண்களுக்கு நிகராக பெண்களும் கப்பலை இயக்கும் வல்லமைபடைத்தவர்கள். அதில் பாரபட்சம் இருக்கக்கூடாது” என உச்சநீதிமன்றநீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும்அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கியஅமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.