புதுதில்லி:
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகிய பொருளாதார நடவடிக்கைகளே தற்போது ஏற்பட்டு இருக்கும் மந்த நிலைக்குக் காரணம் என்று நிதி ஆயோக் உறுப்பினர் ராம்கோபால் அகர்வாலா தெரிவித்துள்ளார்.பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவை தற்போதைய சூழலில் தேவைதான் என்றாலும்,உரிய திட்டமிடல் இல்லாமல்அவசரகதியில் மேற்கொள்ளப் பட்டுவிட்டன. திவால் நடவடிக் கைச் சட்டமும் முறையான திட்டமிடல் இன்றி கொண்டு வரப் பட்டுள்ளது என்று அகர்வாலா கூறியுள்ளார்.கறுப்புப் பணப் புழக்கம் பொருளாதாரத்தை பாதித்து வந்தது உண்மைதான் என்றாலும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை உரியதிட்டமிடலுடன் மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.மிகுந்த எச்சரிக்கையாக, “இவையனைத்தும் தன் தனிப்பட்ட கருத்து” என்று கூறிக்கொண்டுள்ள அகர்வாலா, “இந்தியா பொருளாதார ரீதியாக கடினமான காலகட்டத்தில் உள்ளது. ஆனால் அது தீவிர நெருக்கடிஅல்ல” என்றும், “2025-க்குள்5 டிரில்லியன் டாலர் பொருளா தாரத்தை எட்டுவதற்கு நடுத்தர வர்க்கத்தினரின் வருவாயை அதிகரிக்க வேண்டும்; தற்போதைய நிலையில் ஆண்டுக்கு 8 சதவிகித வளர்ச்சி மிக அவசியம்” எனவும் கூறியுள்ளார்.