நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 70 காசுகள் சரிந்து ரூ.1.95 ஆக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. கொரோனா பீதியால் 10 ஆண்டுகளில் இல் லாத அளவுக்கு முட்டை விலை சரிந்துள்ளது. சென்னையில் உள்ள கடைகளில் ஒரு முட்டை 3.50 முதல் விற்பனை செய்யப் படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் 20 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. கோழிப்பண்ணையாளர்களுக்கு ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.