tamilnadu

img

இந்தியர் உள்பட 3 பேருக்கு  பொருளாதார நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்:
மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தானசாதனை படைத்த வர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2019-ம் ஆண்டு பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் திங்களன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பொருளியல் நிபுணர்கள் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகியோர் இந்த ஆண்டு பொருளாதார த்திற்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.வறுமையை ஒழிப்பதற்கான முன்னோடி திட்டங்களை வகுத்ததற்கான பொருளியல் நிபுணர்கள் 3 பேருக்குபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு வென்ற நிபுணர்களில் ஒருவரான அபிஜித் பானர்ஜி, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டூஃப்லோ கணவர் - மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.