புதுதில்லி:
வட இந்தியாவில் தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதில், தீபாவளிக்கு முன்னதாகவரும் தந்தேரஸ் (Dhanteras) என்ற பண்டிகை மிக முக்கியமானது. தங்க ஆபரணங்கள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள், சமையல் பாத்திரங்கள் வாங்குவதே இந்த நாளின் சிறப்பு. இந்தாண்டுக்கான பண்டிகை அக்டோபர் 25-ஆம் தேதிகொண்டாடப்பட உள்ளது.இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் டியோபந்த் நகர்பாஜக தலைவர் கஜ்ராஜ் ரானாஎன்பவர், தன் மாநில மக்களைத் தங்க நகைகளுக்குப் பதிலாக வாள்,இரும்பு ஆயுதங்கள் போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.அயோத்தி வழக்கின் இறுதித் தீர்ப்பு வரவுள்ளதை ஒட்டியே கஜ்ராஜ் ரானா இவ்வாறு பேசியுள்ளார்.
“அயோத்தியில் மிகப் பெரியராமர் கோயில் அமைய வேண்டும் என்பதுதான் நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களின் ஆசையாக உள்ளது. அயோத்தி வழக்கு தொடர்பானஇறுதித் தீர்ப்பு விரைவில் வரவுள் ளது. அது ராமர் கோயிலுக்குச் சாதகமாக வரும் என நம்புகிறோம்.தீர்ப்பு எப்படி வந்தாலும் சரி, தந்தேரஸ் பண்டிகைக்கு மக்கள் ஆபரணங்களை வாங்குவதற்குப் பதிலாக இரும்பு ஆயுதங்கள், வாள் களை வாங்கி சேமித்து வைப்பது நல்லது. உரிய நேரம் வரும்போது அந்த ஆயுதங்கள், நம்முடைய பாதுகாப்புக்கு உதவும்” என்று ஊடகங்கள் முன்பு ரானா கூறியுள்ளார். அவரின் இந்தப் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. ரானா வன்முறையைத் தூண்டுவதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.எனினும், தனது கருத்தை ரானாமாற்றுவதாக இல்லை.“நாட்டின் சூழ்நிலை மோசமடையும் நேரங்களில் இந்த ஆயுதங்கள்மூலம் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறோம். எங்கள்சடங்குகளில்கூட ஆயுதங்களை வணங்குகிறோம். நமது கடவுள்களும் தெய்வங்களும் சூழ்நிலைகளைப் பொறுத்து ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளனர்” என்று மீண் டும் வன்முறையைத் தூண்டுவது போலவே பேசியுள்ளார்.