tamilnadu

img

எட்டாயிரம் கோடி மதிப்பிலான பயிர்களை அழிக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள்

இராஜஸ்தான், மே 24 பயிர்களை உண்ணும் வெட்டுக்கிளிகள் மத்திய பிரதேசத்திற்குள் நுழைந்துவிட்டன. அவை நாட்டின் உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்துகின்றன. இது 27 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய தாக்குதல் ஆகும்.  இராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் பயிர்கள், மரங்களை அழித்த பாலைவன வெட்டுக்கிளிகள் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்கின் தொகுதியான புஹ்னியில் செஹோரில் நுழைந்துள்ளன. முன்னதாக நீமுச் மாவட்டத்திற்குள் நுழைந்த பூச்சிகள் மால்வா நிமரின் பகுதிகளுக்குச் சென்று தற்போது போபாலுக்கு அருகில் உள்ளன. பாலைவன வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்ட மாவட்டகிராமங்களில் உள்ள  விவசாயிகளுக்கு மாநில வேளாண் பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது.

டிரம்ஸ் வழி யாக உரத்த ஒலிகளைப் எழுப்புங்கள். பாத்திரங்களை ஓங்கித் தட்டுங்கள்,  கூச்சலிடுங்கள் இதன் மூலம் தானியங்களை பாதுகாக்க முடியும் எனக் கூறியுள்ளனர். வெட்டுக்கிளிகள் இரவு ஏழு மணி முதல் ஒன்பது மணி எங்குவேண்டுமானாலும் விவ சாயிகள் விழிப்புடன் இருக்கவேண்டும். வெட்டுக்கிளிகளின் இயக்கத்தை கண்காணி க்க வேண்டும். டிராக்டர்கள் மற்றும் தீயணைப்பு  வாகனங்களின் உதவியுடன்  இரசாயன ஸ்ப்ரேயர்களைப் பயன்படுத்து வதன் மூலம் வெட்டுக்கிளிகளை உணவு தானியத்தை அழிப்பதை தடுக்க முடியும். வெட்டுக்கிளிகளை உரிய முறையில் தடுக்காவிட்டால் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான பயிர்களை அழித்துவிடும். காய்கறிகள், பழங்கள், நர்சரிகளைக் கூட வெட்டுக்கிளிகள் தாக்கும்.

குறிப்பாக பருத்தி, மிளகாய் நாசமடைந்தால் பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டமேற்படும்.  இராஜஸ் தான் தொடங்கி உத்தரபிரதேசம் வரை  பாலைவன வெட்டுக்கிளிகளின் கூட்டம் பரவி  வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.