புதுதில்லி:
தொழிலதிபர் வீட்டில் அத்துமீறி நுழைந்த வழக்கில் தில்லிசபாநாயகருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு கிழக்கு தில்லி காலனிபகுதியிலுள்ள கட்டுமான தொழிலதிபர் மணிஷ் காய் என்பவரது வீட்டில், தேர்தலையொட்டி விநியோகிப்பதற்காக மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, தில்லி சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்து, பீரோ, ஜன்னல்களை அடித்து நொறுக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த தில்லி சிறப்பு நீதிமன்றம், ராம் நிவாஸ் கோயலுக்கும், அவருடன் குற்றம்சாட்டப்பட்ட மேலும் 4 பேருக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனை வழங்கிஉத்தரவிட்டுள்ளது.