tamilnadu

img

சைக்கிளில் சென்று பொறுப்பேற்பு - ஹர்ஷ்வர்த்தன் ‘விளம்பரம்’

புதுதில்லி:
சர்வதேச சைக்கிள் தினத்தை முன்னிட்டு தில்லியில் தனது அலுவலகத்துக்கு சைக்கிளில் சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக ஹர்ஷ்வர்தன் பொறுப் பேற்றுக்கொண்டார். 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கபதிவில், நான் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன். என் மீது நம்பிக்கை வைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மோடி அரசுக்கு நாட்டு மக்களின் உடல் நலனில் அதீத அக்கறை உள்ளது. எனது பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றப்பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதிவில், இன்று சர்வதேச சைக்கிள் தினம். சைக்கிள் ஓட்டுவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்றும் அனைவராலும் வாங்கக்கூடிய வாகனம். சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து வாகனம் என குறிப்பிட்டு சைக்கிள் ஓட்டிச் செல்லும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இரண்டாவது முறையாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.