ராஞ்சி
நாட்டின் கிழக்கு பகுதி மாநிலங்களில் ஒன்றான ஜார்க்கண்டில் கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது. இதுவரை அங்கு 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 373 பேர் பலியாகிய நிலையில், 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் மேலும் ஓவர் மாதத்திற்கு அதாவது செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.
நீட், ஜேஇஇ ஆகிய தேர்வுகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனவும், அவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி அளிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.