புதுதில்லி, மே 18 -மக்களவைத் தேர்தலில், கிரிமினல் பின்னணி கொண்ட வேட்பாளர்களை அதிகம் நிறுத்தியது, பாஜக-தான். அந்த கட்சிசார்பில் போட்டியிடும் 433 வேட்பாளர்களில் 175 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். அதிலும், 124 பேர் (29 சதவிகிதம்) கொலை, கொலைமுயற்சி, பாலியல் வல்லுறவு, கடத்தல் போன்ற கொடூரமான குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள்.இந்நிலையில், நாடு முழுவதும் போட்டியிடும், பெண் வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குகளை மட்டும், தனியாக ஆராய்ந்து, அதன் விவரங்களை தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏ.டி.ஆர்) வெளியிட்டுள்ளது. இதிலும் பாஜக-வே முதலிடம் பிடித்துள்ளது.நாடு முழுவதும் 724 பெண் வேட்பாளர்கள் களத்தில் இருக் கும் நிலையில், அவர்களில் 716பேர்களின் பின்னணியை, சம்பந் தப்பட்ட வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரத்தை பகுப்பாய்வுசெய்து, ஏ.டி.ஆர். அமைப்புதனது ஆய்வை வெளியிட்டுள் ளது. 110 பெண்வேட்பாளர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்பதும், அவர்களில் 78 பேர் மீது தீவிரமான குற்றவியல் வழக்குகள் உள்ளன என்பதும் அதில் தெரியவந்துள்ளது.இந்நிலையில், கட்சி வாரியான பகுப்பாய்வில்தான், பாஜகவின் பெண் வேட்பாளர்கள் 53 பேரில் 18 பேர் குற்றவியல் வழக்கு பின்னணியை கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்களில் 13 பேர் மீது தீவிரமான குற்றவியல் வழக்குகள் உள்ளன என்பது அம்பலமாகி உள்ளது.