tamilnadu

img

கிரிக்கெட்டில் வீரர் வாசிம் ஜாபர் ஓய்வு 

மும்பை
மும்பையைச் சேர்ந்த வாசிம் ஜாபர் 1996-97 ஆம் ஆண்டிலிருந்து கிரிக்கெட் விளையாட்டில் காலடி வைத்தார். 

ஒருநாள் போட்டிகளை விட டெஸ்ட் போட்டிகளில் நன்றாக விளையாடியதால் இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை டெஸ்ட் போட்டியில் அதிகளவில் களமிறங்கியது. இந்தியாவுக்காக 31 டெஸ்ட் போட்டிகளில் (1944 ரன்கள்)  விளையாடியுள்ள ஜாபர் பல்வேறு சமயங்களில் தனது துடிப்பான, நங்கூரமான் ஆட்டத்தால் அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.  

2008-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தனது கடைசி ஆட்டத்தில் விளையாடினார். அதன் பிறகு ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். ஐபிஎல் தொடரிலும் விளையாடியுள்ள வாசிம் ஜாபர், ரஞ்சிக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமை பெற்றவர். இந்நிலையில், சனியன்று அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.