புதுதில்லி:
இடதுசாரிகளின் ஆதரவுடன் அமைந்த, முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, அரசின் அனைத்து நிலைகளிலும்வெளிப்படை தன்மை இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக, தகவல் அறியும் உரிமைச் சட்டம், கடந்த 2005-ஆம்ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
ஆனால், அந்தச் சட்டத்தைநீர்த்துப் போகச் செய்யும் வகையில், மோடி அரசு புதியமசோதா ஒன்றைக் கொண்டுவந்து, எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.முன்னதாக இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.ராகேஷ் மாநிலங்களவையில் பேசியுள்ளார். அப்போது, அவரைப் பேசுவதற்கு கூட அனுமதிக்காமல், பாஜக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
“என்னை ஏன் தடுக்கிறீர்கள்? இப்படி தான் அவையை நீங்கள் நடுத்துவீர்களா? நீங்கள் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலில் ஈடுபடுகிறீர்கள். நான் நிச்சயம் பேசியே ஆக வேண்டும்.நீங்கள் (பாஜக எம்.பி.க்கள்) நாடாளுமன்ற நடவடிக்கையே அழித்தொழிக்கப் பார்க்கிறீர்கள்” என்று கே.கே. ராகேஷ்கடுமையாக கண்டித்தும், பாஜகவினர் அமைதியாகவில்லை. தொடர்ந்து கூச்சலிட்டுள்ளனர். “நான் பேசுவதற்கு அவைத் தலைவர் எனக்குஅனுமதி அளிக்க வேண்டும்”என்று கூறி ராகேஷ் பேசுவதற்கு எவ்வளவோ போராடியும், பாஜக எம்.பி.க்கள்,அவரை பேசவிடாமல் தடுத் துள்ளனர்.பாஜகவினரின் இந்த செயலை பொறுத்துக் கொள்ள முடியாத ராஷ்ட்ரியஜனதாதளம் எம்.பி மனோஜ்குமாரும், “இப்படி கூச்சலிட் டால் யார்தான் பேச முடியும். ஜனநாயகத்தை நீங்கள் கொல்லப் பார்க்கிறீர்கள். எங்கள் (எதிர்க்கட்சிகள்) தரப்பை நாங்கள் நிச்சயம் எடுத்துக் கூறியே ஆக வேண்டும். அதற்கு இந்தஅவை அனுமதி அளித்தே ஆக வேண்டும்” என்று கூறியுள்ளார். ஆனால் அவரை
யும் பேசவிடாமல் பாஜக வினர் கூச்சலிட்டுள்ளனர்.