ஹைதராபாத்:
அரசியலமைப்பு சார்ந்த இந்தியாவின் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டிகூறியுள்ளார்.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்ற ‘சிஏஏ’ எதிர்ப்புப் போராட்டத்தில், அமுல்யா லியோனா எனும்இதழியல் மாணவி, ‘பாகிஸ்தான்ஜிந்தாபாத்’ என முழக்கமிட்டது பெரும் விவாதத்திற்கு உள்ளானது. தேசத் துரோகச் சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அமுல்யா கைது பற்றி, நீதிபதி பி. சுதர்சன் ரெட்டியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.அப்போது, “தேசத் துரோகச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப் படுவது உண்மைதான்; நீதிமன்றம் இதுபோன்ற போக்குகளில் தலையிட வேண்டும்” என்று சுதர்சன் ரெட்டி கூறியுள்ளார்.
“தேசத் துரோகச் சட்டம் மட்டுமின்றி வேறெந்த கிரிமினல் சட்டத்தின் கீழும் மாணவி அமுல்யாவை கைது செய்ய முடியாது” எனவும் அவர் தெரிவித் துள்ள நீதிபதி சுதர்சன் ரெட்டி, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மாணவி அமுல்யாவுக்கு நக்சல் தொடர்பு இருப்பதாகக் கூறியதை, “எவ்வித அடிப்படையும் இல்லாத கருத்து”என்று சாடியுள்ளார்.மாணவி கைது செய்யப்பட்டபிறகு அதை நியாயப்படுத்த பலநிறங்களை அவர் மீது பூச முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும், அரசியலமைப்பு சார்ந்த ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.