கொரோனா நோய் மற்றும் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மத்திய அரசு மக்களை பாதுகாத்திடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 26 அன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைநகர் தில்லியில் நடைபெற்ற பேரணி-ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பேசினார். பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தில்லி மாநிலச் செயலாளர் கே.எம்.திவாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.