tamilnadu

img

கார்ப்பரேட்டுகளை வளப்படுத்தும் நடவடிக்கைகள் சாமானிய மக்களை மேலும் அவதிக்கு உள்ளாக்கும்

புதுதில்லி:
மத்திய அரசு கார்ப்பரேட்டுகளை மேலும் வளப்படுத்திட மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள், சாமானிய மக்களை மேலும் துன்ப துயரங்களுக்கு ஆட்படுத்திடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:\

ஆர்எஸ்எஸ்-பாஜக அரசாங்கமானது, ஓர் அவசரச்சட்டத்தின் மூலமாக வருமானவரிச் சட்டத்தைத் திருத்தி, கார்ப்பரேட்டு களுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் மிகப்பெரிய அளவில், அதாவது 1 லட்சத்து 45 கோடி ரூபாய் அளவிற்கு, சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது. ஏற்கனவே ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்கும், ஏற்றுமதிதுறையில் பணியாற்றும் கார்ப்பரேட்டு களுக்கும் அளித்திட்ட 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான சலுகைகளுடன் இப்போது இந்த்த்தொகையும் சேர்ந்து கொண்டிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியி லிருந்து அபகரித்த 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் தொகையை, நாட்டில் பொது முதலீட்டை அதிகரிப்பதற்கோ அதன்மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கி, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கோ பயன்படுத்தாமல், கார்ப்பரேட்டுகள் பக்கம் மடைமாற்றியுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்திற்கு முக்கிய காரணம்,நாட்டு மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாமல்போனதும் அதன்காரணமாக அவர்களால்பொருள்களை வாங்க முடியாமல் போனதுமேயாகும். பட்ஜெட் அறிவிப்புகளைத் தலைகீழாக்கும் விதத்தில்இப்போது அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளால் பொருளாதார மந்தத்தை எந்தவிதத்திலும் மாற்றியமைத்திட முடியாது.ஏனெனில் உற்பத்தியாகும் பொருள்களை வாங்குவதற்கு மக்களிடம் பணம் இல்லை. உலகப் பொருளாதார மந்தம் தொடர்வதும், உலக வர்த்தகத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கும் நிலையிலும், நாட்டின் ஏற்றுமதியில் உயர்வு ஏற்படும் என்பதற்கான நம்பிக்கை பூஜ்யமேயாகும்.கார்ப்பரேட் வரி, அதன்மீதான சர்சார்ஜ் மற்றும் செஸ் வரி உட்பட, 34.94 சதவீதத்திலிருந்து 25.17 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு சுமார் 10 சதவீத அளவிற்கு கார்ப்பரேட்டுகளுக்கு வரிகளில் சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், 2019அக்டோபர் 1இலிருந்து புதிதாக முதலீடுகள்
செய்திடும் கம்பெனிகளுக்கு சர்சார்ஜுகள் உட்பட 17.01 சதவீதம் வரி செலுத்தினால் போதும் என்றும் அரசால் கூறப்பட்டிருக்கிறது.

இதன்மூலமாக பட்ஜெட்டின்போது மூலதன ஆதாயங்களில் சர்சார்ஜ் விதிக்கப்படும் என்று அறிவித்தது, தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன்  காரணமாக, அந்நிய முதலீட்டாளர்கள் அபரிமிதமாக ஆதாயம்  அடைகிறார்கள். அமெரிக்காவிற்கு மோடி பயணம் செய்யும் சமயத்தில், அமெரிக்க முதலீட்டாளர்களையும் மற்றும் உலகில் பிற நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களையும் குஷிப்படுத்தும் விதத்தில் மிகவும் வெட்கக்கேடானமுறையில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது.வேலையில்லாத் திண்டாட்டம் மிக மோசமாகியுள்ள நிலையில், தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை நடத்தமுடியாமல் மூடிக்கொண்டிருக்கும் நிலை யில், பல தொழில்நிறுவனங்களில் ஆட்குறைப்புகள் செய்யப்பட்டுவரும் நிலையில், உழைக்கும் மக்களின் உண்மையான வருமானங்கள் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் நிலையில், மேற்கண்ட வாறு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் எதுவும் மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கோ, நாட்டின் பொரு ளாதாரத்தைப் புதுப்பிப்பதற்கோ உதவாது. இப்போது தேவை என்னவெனில், மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் அரசாங்கமோ அதனைச் செய்திடாமல் அதற்கு நேரெதிரான திசையில் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. இது, இந்தியாவின் கஜானவை, தனியார் கார்ப்பரேட்டுகள் ஆதாயம் அடையும் விதத்திலும், ஊக வர்த்தகர்கள் லாபமீட்டும் விதத்திலும், திறந்துவிடும் நடவடிக்கையே தவிர வேறல்ல.

இத்தகைய கார்ப்பரேட்டுகள்-மதவெறியர்கள் பிணைப்பு நாட்டு மக்கள் மீது மேலும் துன்ப துயரங்களைத் திணித்திடும். இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டுள்ள ரிசர்வ் தொகையான 1 லட்சத்து76 ஆயிரம் கோடி ரூபாயை நம் நாட்டிற்கு மிகவும் தேவையாக இருக்கின்ற உள்கட்டமைப்புவசதிகளைக் கட்டி எழுப்பிடக்கூடிய விதத்தில், பொது முதலீட்டுக்குப் பயன் படுத்திட வேண்டும் என்கிற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொள்கிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.