tamilnadu

img

கொரோனா தடுப்பூசிக்கு 18 மாதம் ஆகலாம்...

புனே:
கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி மருந்து உருவாக்குதல், தற்போதுஉலகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவாலாக உள்ளது. 2021-ஆம் ஆண்டு இறுதிக்குள் இரண்டு பில்லியன் டோஸ் மருந்துகளை தயாரிக்கும் ஒரு நிறுவனத்துக்கு 18.1 பில்லியன் டாலர்  நிதியுதவி  தேவைப்படலாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசிக்காக 200-க்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. அதில், 15 மருந்துகள் மனிதர்களிடம் பரிசோதிக்கும் நிலையை எட்டியுள்ளன. அடுத்த 12 -18 மாதங்களில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி மருந்து தயாராகும் என்ற நம்பிக்கை உள்ளது. மருந்து கண்டுபிடிப்பதில் யார் முன்னணியில் உள்ளனர் என்ற கேள்விக்கு பதிலளித்த சுவாமிநாதன், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி மருந்து உலகளாவிய   உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளது. உரிய நிலையை எட்டியனால் முதலில் இந்தத் தடுப்பூசி வெளியாகலாம் என்று தெரிவித்தார். 

அவர்கள் இரண்டாம் கட்ட நிலைக்கு முன்னேறியுள்ளனர். பல நாடுகளில் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையை பல நாடுகள் நடத்தத் திட்டமிடுகின்றன. ஜூலை நடுப்பகுதியில் மருத்துவப் பரிசோதனையின் மூன்றாம் கட்ட  நிலையை சோதிக்க மாடர்னா நிறுவனம்  திட்டமிட்டுள்ளது. மருந்துகள் மருத்துவப் பரிசோதனையின் முடிவுகளைப் பார்க்கும் வரை, இந்தத் மருந்துகளின் செயல்திறனையும், பாதுகாப்பையும் மதிப்பிட முடியாது என்றார்.