tamilnadu

img

கொரோனா வைரஸ் பாதிப்பு : மூன்றாம் கட்டத்திற்கு சென்றுவிடாமல் தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துக....

போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை  எடுக்க தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

 கட்சியின் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

சென்னை,மார்ச் 17- கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும் கட்சியின் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.  இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யின் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநில அளவிலும் மாவட்டங் களிலும் நடத்த திட்டமிட்டிருந்த அனைத்து அரங்க மற்றும் பொது நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் மார்ச் 20 அன்று திண்டிவனத்தில் பங்கேற்பதாக இருந்த சிஏஏ-என்பிஆர்-என்ஆர்சி குறித்த பட்டறை ஒத்தி வைக்கப்படுகிறது. இதுபோன்று மாவட்டங்களில் தீர்மானிக்கப்பட்டுள்ள அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்க வேண்டும். உரிய விழிப் புணர்வை உருவாக்கிட வேண்டும். அதேசமயம், அரசுத்தரப்பில் பள்ளி கள் மற்றும் மக்கள் அதிகம் திரளும் இடங்கள் மூடல் என்ற நடவடிக்கை எடுப்பது மட்டும் போதாது. கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி பரிசோதிப்ப தற்கான ஏற்பாடுகள் திருப்தியளிப்பதாக இல்லை. 

கொரோனா வைரஸ் பாதிப்பில் உள்ளவர்களை அடையாளங் காணவும், அவர்களுக்கு முறையான சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்ற ஐயம் உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பது நல்லது. ஆனால் உரிய பரிசோதனைகள் இல்லாமல் தமிழ்நாட்டில் பாதிப்புகள் இல்லை என அரசு மெத்தனமாக இருந்துவிடக் கூடாது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பாதிக்கப்பட்டவர்களை தனிமைப் படுத்தி வைப்பதற்கும், கண்காணிப் பதற்கும் உரிய கட்டமைப்புகள் போது மான அளவு உருவாக்கிட வேண்டும். 

அண்டை மாநிலமான கேரளா வில் இடது ஜனநாயக முன்னணி அரசு திறம்பட எடுத்திருக்கும் நடவடிக்கை களையும் கணக்கிலெடுத்து உரிய  முயற்சிகளை போர்க்கால அடிப்படை யில் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.