30 நிமிடத்தில் முடிவு- ஒரு லட்சம் பேருக்கு நடத்த திட்டம்
சென்னை, ஏப்.9- இன்று முதல் தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பரி சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள் ளது. ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு நடத்தவும் 30 நிமிடத்தில் முடிவு தெரியும் என்று கூறப்படு கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரு கிறது. கொரோனா வைரஸால் பாதிக் கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயி ரத்து 734 பேராகவும் , உயிரிழந்த வர்கள் எண்ணிக்கை 166 பேராகவும் அதிகரித்துள்ளது என்றும் குணம டைந்தவர்கள் எண்ணிக்கை 473 பேராக உள்ளது என்றும் மத்திய சுகா தாரத்துறை அமைச்சகம் தெரிவித் துள்ளது.
கொரோனா தொற்றை அறியும் சோதனைக்காக சீனாவிலிருந்து ஒரு லட்சம் துரித சோதனைக்கருவிகளை தமிழக அரசு வாங்கியுள்ளது. இந்தக் கருவிகளைக் கொண்டு ஏப்ரல் 10 வெள்ளியன்று முதல் பரிசோத னைக்கு பயன்படுத்தப்படவுள்ளன. இந்தக் கருவி மூலம் வேகமாக ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும். அந்தப் பரிசோதனையின் முடிவுகளை 30 நிமி டங்களில் பெற முடியும். கொரோனா அதிகம் பாதித்த இடங்களுக்கு இந்த உபகரணங்கள் அனுப்பி வைக்கப் பட உள்ளன.
துரித பரிசோதனைக் கருவிகள், சமூகப் பரவல் இருக்கிறதா என்பதை அறிய உதவும். தடுத்து வைக்கப்பட்ட பகுதிகளில் இந்த கருவிகளைப் பயன்படுத்தி சமூகப் பரவலை அறிய வுள்ளதாக சுகாதாரத்துறை தெரி வித்துள்ளது. அண்ணா பல்கலைக் கழக ஜி.ஐ.எஸ் மேப்பிங் மூலமாக எந்தெந்த பகுதி மக்களுக்கு துரித பரிசோதனைகள் தேவைப்படும் என் பது கண்டறியப்படும்.