டோக்கியோ
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் நகரில் கொரோனா என அழைக்கப்படும் ஆட்கொல்லி வைரஸ் பரவியது. கொஞ்சம் கொஞ்சமாக மற்ற மாகாணங்களுக்குப் பரவிய கொரோனா வைரஸ் தொடக்கத்தில் பெரியளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
புத்தாண்டுக்குப் பின்பு புதிய அவதாரம் எடுத்த கொரோனா வைரஸ் வுஹான் நகரை புரட்டியெடுத்தது. தினமும் 40 பேர் விதம் தற்போதைய நிலவரப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை 1,350-க்கும் அதிகமானது. மேலும் வைரஸ் தாக்கிய 40,000 பேரில் 5500-க்கும் மேற்பட்டோர் மோசமான நிலையில் இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வருகிறது. கிழக்கு ஆசியப் பகுதிகளில் ஆமை வேகத்தில் நகர்ந்த கொரோனா வைரஸ் மலேசியா, தைவான், ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
இந்தநிலையில், தனது சொந்த மக்கள் அதிகம் பயணம் செய்திருந்த கப்பலை கூட நடுக்கடலில் நிறுத்தி அதிகளவில் தற்காப்பு பணிகளில் ஈடுபட்ட ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 80 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த இறப்பு தான் ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட முதல் மரணம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.