புதுதில்லி:
கொரோனாவின் முக்கிய அறிகுறியாக இருமல், காய்ச்சல், சுவாசம்செய்வதில் சிரமம் ஆகியவை பார்க்கப்படுகிறது. மூக்கில் ஒழுகுதல், தொண்டை வலி, தலைவலி, உடல் வலி, வயிற்றுப்போக்கு மட்டுமன்றி, சிலருக்கு தலைச்சுற்றலும் ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், இதுவரை தும்மல் அறிகுறியாக பார்க்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.