tamilnadu

img

உச்சத்தில் கொரோனா பரவல்.... அதிர்ச்சியளிக்கும் மத்திய அரசின் புள்ளிவிவரம்.... தமிழகத்தில் தினந்தோறும் அதிகரிக்கும் நோயாளிகள்

புது தில்லி:
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் 12 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சியான தகவல். சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் 50-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு ( Ministry of Health and Family Welfare)  வெளியிட்டிருக்கும் புள்ளி விவரங்களின் (திங்கட்கிழமை  மாலை ஆறு மணி நிலவரம்) அடிப்படையில் தெரியவந்துள்ளது.

தெற்கு தில்லி முதலிடத்தில் உள்ளது. இங்கு  320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.ஒன்பது மாநிலங்களைச் சேர்ந்த 12 மாவட்டங்களில், கொரோனா பாதித்த மூன்றில் ஒரு பங்கினர்  (4,067-இல் 1,386 பேர்) உள்ளதை மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.தெற்கு தில்லியை அடுத்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை 298 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

100-லிருந்து 150 பேர்
கேரளாவின் காசர்கோட்டில் 136 பேர், மத்தியப் பிரதேசம் இந்தூரில் 110 பேர், தெலங்கானாவின் ஹைதராபாத்தில் 113 பேர் ஆகிய மாவட்டங்களில் தலா  100-லிருந்து 136 பேர் வரை  நோயாளிகள்  உள்ளனர்.
ஆகமதாபாத், கன்னூர், புணா, ஜெய்ப்பூர், சென்னை, யாதாரி மற்றும் கௌதம் புத் நகர் மாவட்டங்களில்  50-முதல் 100 நோயாளிகள் வரை உள்ளனர்.மாநில வாரியாக பார்த்தால் மகாராஷ்டிரம், தமிழகம், தில்லி ஆகியவற்றில் தலா 500-க்கும் மேற்பட்ட நோயாளிகளுடன் உள்ளன.  கொரோனோவின் வேகம் அதிகரித்து வருவதையே மத்திய அரசின் புள்ளிவிபரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

கொரோனா உச்சத்தில் உள்ள 12 மாவட்டங்கள்
(அடைப்புக்குறிக்குள் உள்ளவை மாநிலங்கள்)
1. தெற்கு தில்லி (தில்லி)  - 320
2. மும்பை (மகாராஷ்டிரா) - 298
3. காசர்கோடு (கேரளம்) - 136
4. ஹைதராபாத் (தெலுங்கானா) - 113
5. இந்தூர் (மத்தியப்பிரதேசம்) - 110
6. சென்னை (தமிழ்நாடு) - 81
7. புணே (மகாராஷ்டிரா) - 62
8. கௌதம் புத் நகர் (உத்தரப்பிரதேசம்) - 55
9. ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) - 54
10. அகமதாபாத் (குஜராத்) - 53
11. யாதாரி (உத்தரப்பிரதேசம்) - 52
12. கண்ணூர்  (கேரளம்) - 52