tamilnadu

img

தில்லியில் கொரோனா பரவல் குறைகிறது.... முதல்வர் கெஜ்ரிவால் தகவல்

தில்லி 
உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் உலுக்கி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 800-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், நாட்டின் தலைநகர் பிரதேசமான தில்லியில் கொரோனா பரவல் வேகம் கடந்த வாரத்தை விடச் சற்று குறைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.  

இதுகுறித்து அவர் விரிவாகக் கூறியதாவது," தில்லி அரசு மத்திய அரசின் சமீபத்திய வழிகாட்டுதல்களுடன் இணைந்துள்ளது. சந்தைகள், வணிக வளாகங்கள் மீண்டும் திறக்கப்படாது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் தற்போது உள்ள நடைமுறையே மீண்டும் பின்பற்றப்படும். குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகள் மட்டுமே திறக்கப்படும். இந்த கட்டுப்பாடுகள் மே 3 வரை அதாவது இரண்டாவது முழு ஊரடங்கு நிறைவு பெறும் நாள் வரை தொடரும். தில்லியில் கடந்த வாரத்தை விட கொரோனா பரவல் சற்று குறைந்தது" என ஆறுதல் அளிக்கும் விதத்தில் கூறியுள்ளார். தில்லியில் இதுவரை 2626 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 54 பேர் பலியாகியுள்ள நிலையில், 800-க்கும் மேற்பட்டோர் கொரோனவிலிருந்து மீண்டுள்ளனர்.