tamilnadu

img

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 3 பேராக உயர்வு?

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 பேராக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். பல்வேறுநாடுகளிலும்  கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா,  அரியானா, உத்தரப்பிரதேசம், தில்லி, கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, காஷ்மீர், லடாக், தமிழ்நாடு, உத்தர்கண்ட், பஞ்சாப் ஆகிய 15 மாநி லங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

கொரோனா வைரசுக்கு கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவரும், தில்லியைச் சேர்ந்த 69 வயது மூதாட்டியும் உயிரிழந்தனர். தற்போது மகாராஷ்டிராவில் 64 வயது முதியவர் ஒருவர் பலியாகி யுள்ளார். மும்பை கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றும் இதைத்தொடர்ந்து  இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியான வர்களின் எண்ணிக்கை 3 பேராக அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இது குறித்து சுகாதாரத்துறை சார்பில்   விரைவில் அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.கொரோனாவால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை தினசரி உயர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மராட்டியத்தில் அதிகபட்சமாக 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். கேரளாவில் 27 பேருக்கும், அரியானாவில் 14 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 13 பேருக்கும், தெலுங்கானாவில் 3 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது.