தில்லி
நாட்டின் தலைநகர் மண்டலமான தில்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்தது. அதாவது ஆயிரத்துக்குள் தினசரி பாதிப்பு இருந்தது. இதனால் அம்மாநில மக்கள் நிம்மதி பெருமூச்சுடன் இயல்பு நிலை பற்றி யோசித்து வந்தனர்.
இந்நிலையில் மீண்டும் பழைய வேகத்தில் கொரோனா பரவல் தலைதூக்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தில்லியில் புதிதாக 1,113 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 1,48,504 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 14 பேர் பலியாகிய நிலையில், மாநிலத்தின் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 4153 ஆக உயர்ந்துள்ளது. இன்று (புதன்) ஒரே நாளில் 1,021 பேர் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,33,405 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.