tamilnadu

img

கொரோனா பாதிப்பு: 107 பேராக அதிகரிப்பு

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 பேராக  அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள் ளது.சீனாவின் உகான் நகரில்  கொரோனா வைரஸ் நோயால்ஏராளமானோர் பாதிக் கப்பட்டனர். இந்த நோயைஅமெரிக்க ராணுவப்பிரதிநிதிகள் பரப்பினர் என்று சீனாவெளியுறவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது. உலக அளவில் 1.45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இதுவரை கர்நாடகா, தில்லியில்தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து  நாடுமுழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 பேராக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.