tamilnadu

img

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது

புதுதில்லி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா, இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குகள் முடிவுக்கு வந்த நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி,  இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,01,139-ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 3163-ஆக உயர்ந்துள்ளது.  ஆறுதல் அளிக்கும் விஷயமாக, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை  39174- ஆக உள்ளது.  

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,970 பேர்கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 134 பேர் உயிரிழந்துள்ள னர். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 35,058 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 1,549 ஆக உள்ளது. இரண்டாமிடத்தில்  தமிழகம் உள்ளது 11,760 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  81 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாமிடத்தில் குஜராத் உள்ளது. 11,745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 694 பேர் உயிரிழந்துள்ளனர். நான்காமிட த்தில் தில்லி உள்ளது. 10,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 168 பேர் உயிரிழந்துள்ளனர். ஐந்தாவது இடத்தில் மத்தியப்பிரதேசம் உள்ளது. 5,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 252 பேர் உயிரிழந்துள்ளனர். ஆறாவது இடத்தில் உத்தரப்பிரதேசம் உள்ளது. 4,605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 118 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆந்திராவில் செவ்வாய்க்கிழமை பகல் 12 மணி நிலவரப்படி  52 பேர் உயிரிழந்துள்ளனர், 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,489 ஆக உயர்ந்துள்ளது.

செவ்வாயன்று அசாமில் 20 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள் ளது. இது ஒரே நாளில் ஏற்பட்டுள்ள அதிகபட்ச எண்ணிக்கையாகும்.  மொத்த எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தானில்  செவ்வாய்க்கிழமை காலை 11 மணி நிலவரப்படி 122  பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  மொத்த எண்ணிக்கை 5,629 ஆக உள்ளது.ஒடிசாவில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி நிலவரப்படி 102  பேருக்கு புதிதாகதொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு ள்ளது. மாநிலத்தின் மொத்த எண்ணிக்கை 978 ஆக உள்ளது.