ஜெனீவா/புதுதில்லி, ஜுன் 21- உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 89 லட்சத்தை தாண்டியுள்ளது. இதன்மூலம் உலகம் கொரோனா பாதிப்பில் புதியதொரு ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. (தலையங்கம் 4) உலக அளவில் ஞாயிறன்று மேலும் 1,55,022 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 89,06,655 ஆக அதி கரித்துள்ளது. மேலும் உலக அளவில் கொரோ னா வைரசால் 4,415 பேர் உயிரிழந்ததால், பலி யானோர் எண்ணிக்கை தற்போது 4,66,253 ஆக உயர்ந்துள்ளது கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 47,32,888 பேர் குணமடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் அதிக மாக பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும் (பாதிப்பு - 23,30,311 பேர், உயிரி ழப்பு - 1,21,979 பேர்) இரண்டாவது இடத்தில் பிரே சிலும் (பாதிப்பு - 10,70,139 பேர், உயிரிழப்பு - 50,058 பேர்), மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும் (பாதிப்பு - 5,76,952 பேர், உயிரிழப்பு - 8,002 பேர்) உள்ளன. இந்தப்பட்டியலில் இந்தியா 4 வது இடத்தில் நீடித்து வருகிறது.
இந்தியா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,413 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் தினந்தோறும் லட்சக் கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கியும், ஆயிரக்கணக்கானோரின் உயிரையும் காவு வாங்கியும் வரும் கொரோனா பரவல் அதி கரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 306 பேர் உயிரிழந்து ள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் வைரஸ் தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பிலும் கொரோனா புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் புதிதாக 15 ஆயிரத்து 413 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,27,756 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலம் வாரியாக கொரோனா தொற்று மொத்த எண்ணிக்கை :- மகாராஷ்டிரா -1,28,205, தமிழ்நாடு-56,845, தில்லி-56,746 குஜராத்-26,680, இராஜஸ்தான்-14,536, உத்தரப்பிரதேசம்-16,594 மத்தியப் பிரதேசம்-11,724, மேற்குவங்கம்-13,531, தெலுங்கானா-7,072, கர்நாடகா-8,697
மும்பையில் தினமும் 100 பேர் பலி
நாட்டில் மகாராஷ்டிரா கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. மும்பை நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பில் சிகிச்சை பலனின்றி பலியா னோர் எண்ணிக்கை தொடர்ந்து 2வது நாளாக 100ஐ கடந்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 136பேர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். இது, ஒரு நாளில் ஏற்பட்ட மிக அதிக அள விலான பாதிப்பு ஆகும். இதனால் மும்பையில் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 561 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி கொரோனா வைரசுக்கு 114 பேர் பலியாகி இருந்தனர். கடந்த 2 நாட்களாக மும்பையில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை நாளொன்றுக்கு 100ஐ கடந்து உள்ளது.