தில்லி
ஆசியாவின் கொரோனா மையமாக உள்ள இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி வருகிறது.
குறிப்பாக தினசரி பாதிப்பில் எப்பொழுதும் முதல் 2 இடங்களில் இருக்கும் அமெரிக்ககா மற்றும் பிரேசிலை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தில் உள்ளது. மேலும் கடந்த 6 மணிநேரத்தில் புதிதாக 6,490 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 18.61 லட்சமாக உள்ளது. செவ்வாயன்று மாலை 5 மணி நிலவரப்படி 73 பேர் பலியாகியுள்ள நிலையில், 40 ஆயிரத்தை (39,044) நெருங்கி வருகிறது. கடந்த 6 மணிநேரத்தில் 3 ஆயிரத்துக்கும் குணமடைந்த நிலையில், இதுவரை 12.33 லட்சம் வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 5.89 லட்சம் சிகிச்சையில் உள்ளனர்.