ஹைதராபாத்
ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்த தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதால அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை (50,826) தாண்டியுள்ளது. 447 பேர் பலியாகியுள்ள நிலையில், 39,327 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் 11,052 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளது என பொது சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இயக்குனர் ஸ்ரீநிவாஸ ராவ் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்கு கொரோனா மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், தலைநகர் மண்டலமான ஹைதராபாத் அதிக பாதிப்பைச் சந்திக்கும்" எனவும் கூறியுள்ளார்.
ஏற்கெனவே கேரளம், மேற்குவங்கம் ஆகிய மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளதாக தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.