கரூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட மூத்த தலைவர் து.ரா.பெரியதம்பி, மார்க்சிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டத்திற்கு மூத்த தலைவர் என்று சொல்வதை விட தமிழகத்திற்கு மூத்த தலைவர் என்று சொல்வது தான் பொருத்தமானதாக இருக்கும் என்று கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் கரூரில் நடந்த பாராட்டு விழாவில் பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட மூத்த தலைவர் து.ரா.பெரியதம்பி தனது 91-வது வயதில் அடியெடுத்து வைக்கின்றார். அவருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழுவின் சார்பில் பாராட்டு விழா க.பரமத்தியில் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு முன்னிலை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், தோழர் து.ரா.பெ. அவர்கள், இரண்டு முறை க.பரமத்தி ஊராட்சித் தலைவராக பதவியேற்று ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சிறப்பான பணிகளை மேற்கொண் டார். அவர் டைலர் வேலை செய்து வந்துள்ளார், பின்னர் தன்னை முழுவதுமாக அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டார். தங்களது வாழ்க்கையில் கட்சிக்காக இணைத்துக் கொண்டு கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, தங்களது பணிகளை அர்ப்பணிப்புடன் மக்களுக்காக பணியாற்றி, கட்சிக்காக வாழ்ந்து வருகின்ற இதுபோன்ற தலைவர்களை பாராட்டுவதன் மூலம், கட்சியின் உறுப்பினர்களுக்கும் பெரும் உற்சாகத்தை உண்டாக்கும் என்றார்.
‘‘க.பரமத்தி பகுதியில் சாதி கொடுமையால் தலித் மக்கள் அடக்குமுறை களை எதிர்கொண்ட போது, உடனி ருந்து அவர்களை திரட்டி சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக பலகட்ட போராட்டங்களை நடத்தி, ஒடுக்குமுறை களை உடைத்தெறிந்தவர். தலித் மக்க ளின் பாதுகாப்பை உறுதி செய்தவர் தோழர் து.ரா.பெ.’’ என்றும் கூறினார். கட்சிக்கு நிதி திரட்டுவது, மக்களைத் திரட்டும் பணிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். வயதான காலத்திலும், நேரத்தை கடைபிடித்து சரியான நேரத்திற்கு எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வந்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கையை ஏற்றுக் கொண்டு, அதனை பின்பற்றி, எந்தவித தடுமாற்ற மும் இன்றி இன்றுவரை கட்சிக்காக வாழ்ந்து வருகிறார். தனக்கு கிடைத்த ரூபாய் ஒரு லட்சத்தை கட்சி நிதிக்காக அப்படியேகொடுத்துள்ளார். தோழர் து.ரா.பெரிய தம்பியின் நூறாவது பிறந்தநாளில் மீண்டும் நாம் பாராட்டு விழா நடத்த வேண்டும் எனவும் மதுக்கூர் ராம லிங்கம் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஜோதிபாசு, பி.ராஜு, ஜெ.அன்னகாமாட்சி, சி.முருகேசன், ஒன்றியச் செயலாளர்கள் பழனிச்சாமி, சண்முகம் ராஜா, ராஜாமுகமது உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட னர். கட்சியின் கரூர் மாவட்டக்குழு சார்பில் தோழர் து.ரா.பெரியதம்பிக்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தனர்.