tamilnadu

img

ராமர் பெயரால் வசூலா? அதெல்லாம் இல்லை...

அயோத்தி:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், கோயிலை யார் கட்டுவது? என்பதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.மற்றொரு புறத்தில், ராமர் கோயில் பெயரால், விஸ்வ ஹிந்து பரிசத் (விஎச்பி) அமைப்பு, கடந்தஇருபது- முப்பது ஆண்டுகளாக வசூலில் ஈடுபட்டு வந்ததாகவும், இதில் பல கோடிரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்றும் குற்றச்சாட்டுக் கள் எழுந்தன. “ராமர் கோயிலின் பெயரால் விஎச்பி வசூல்செய்த தொகையை அரசிடம்ஒப்படைக்க வேண்டும்” என்று தற்காலிக ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்தர்தாஸ், நிர்மோகி அகாரா தலைவர் மகந்த் திரேந்திராதாஸ் ஆகியோர் பகிரங்கமாகவே கோரிக்கை விடுத்தனர்.இது விஎச்பி அமைப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், “ராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்டுவதற்காக 1989ஆம் ஆண்டு முதல் விஎச்பி நிதி சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை; அவ்வாறுநிதி எதுவும் திரட்டப்படவில்லை” என்று விஎச்-பியின்சர்வதேச பொதுச்செயலாளர் மிலிந்த் பரண்டேஅவசர அவசரமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.