புதுதில்லி:
குடிமக்களுக்கு அதிகமான வரியை விதிப்பது, சமூகநீதிக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிஎஸ்.ஏ. பாப்டே கூறியுள்ளார்.தில்லியில், வருமான வரி தீர்ப்பாயத்தின் 79-ஆவது அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அப்போதுதான் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.“நாட்டின் வளங்கள் பரவலாவதில் வரித் துறை தீர்ப் பாயம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தீர்ப்பாயத்தில் விரைவாக கிடைக்கும் தீர்ப்பினால் வரி கட்டும் குடிமகன்பயனடைகிறான். அதேபோல வரியை வசூலிப்பவர் களுக்கும் தீர்ப்பாயம் முக்கியமானதாக இருக்கிறது.
வரி ஏய்ப்பு என்பது நாட்டுமக்களுக்கு செய்யும் அநீதி. அதேநேரம் நியாயமற்ற அதீத வரி விதிப்பு, அரசே மக்களுக்கு இழைக்கும் சமூக அநீதி. ஒரு தேனீ, பூக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் சாற்றைப் பிரித்தெடுப் பது போலவே குடிமக்களிடமிருந்தும் அரசு வரி வசூலிக்க வேண்டும்” என்றும் பாப்டே மேலும் கூறியுள்ளார்.2020-21 நிதியாண்டிற் கான பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி 1-ஆம் தேதி,தாக்கல் செய்யவுள்ள நிலையில், தலைமை நீதிபதி இவ்வாறு பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.