புதுச்சேரி, மார்ச் 3- புதுச்சேரி அரசின் கல்வித்துறை அமைச்சர் கமல கண்ணன். இவர் புதுச்சேரி தீயணைப்பு நிலையம் அருகில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். திங்களன்று(மார்ச்3) இரவு கடற்கரை சாலையில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது செல்பேசி அழைப்பு வந்ததை தொடர்ந்து பேசியபடி நடந்து செல்லும் போது, இருசக்கர மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த மர்ம நபர் அமைச்சரின் கைப்பேசியை பறித்துக் கொண்டு, மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். இதுகுறித்து ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில்புகார் அளிக்கப்பட்டது. அமைச்சரின் கைப்பேசியை திருடிச்சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் புதுச்சேரி மக்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.