tamilnadu

img

தலித் பொறியாளருக்கு அமெரிக்காவில் வன்கொடுமை...

புதுதில்லி:
அமெரிக்காவில் சக இந்தியரைச்சாதியைக் குறிப்பிட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக சிஸ்கோ நிறுவன அதிகாரிகள் 2 பேர் மீது புகார்எழுந்துள்ளது. இந்தியாவை சேர்ந்த ஒருவர்,கடந்த 2015 முதல் கலிபோர்னியாவின் சான் ஜோஸில் உள்ள சிஸ்கோ (CiscoSystems) நிறுவன தலைமையகத்தில் தலைமைப் பொறியாளராக வேலைபார்த்து வருகிறார். இவர் பட்டியல்வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இதே நிறுவனத்தில்மேனேஜராக வேலை பார்க்கும் சுந்தர்ஐயர் மற்றும் ரமணா கொம்பெல்லா ஆகிய 2 பேரும், பட்டியல் வகுப்பைச்சேர்ந்த பொறியாளரை, சாதிய ரீதியாகதுன்புறுத்தி வந்துள்ளனர். சிஸ்கோநிறுவனத்தின் சிலிக்கான் வேலி தலைமையகத்தில் வேலைபார்த்த போது துவங்கி இந்த துன்புறுத்தல் நடந்து வந்துள் ளது. ஊதியக் குறைப்பு, வாய்ப்புக்கள் மறுப்புஆகிய பாகுபாட்டை அரங்கேற்றிவந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சுந்தர்ஐயர், பதவி விலகியதாக கூறப்படும்நிலையில், ரமணா கொம்பெல்லாதுன்புறுத்தலைத் தொடர்ந்துள்ளார்.இதையடுத்து, பாதிக்கப்பட்ட பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர், சான் ஜோஸில் உள்ள நீதிமன்றத்திற்கு செல்லவே, அமெரிக்கச் சட்டப்படி பாகுபாடு இல்லாத சூழலை உருவாக்கத் தவறியதற்காக ‘சிஸ்கோ’ நிறுவனம் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.