புதுதில்லி:
‘டிக்டாக்’ பிரபலமும், பாஜக பெண்பிரமுகருமான சோனாலி போகட், அதிகாரி ஒருவரை பொது இடத்தில் சரமாரியாக செருப்பால் அடித்துத் தாக்கியுள்ளார்.
ஹரியானாவைச் சேர்ந்தவர் சோனாலிபோகட். பிரபலமான டி.வி. நிகழ்ச்சித்தொகுப்பாளர் ஆவார். நிறைய டிவி ஷோ-க்கள் செய்துள்ள அவர், ‘டிக் டாக்’ வீடியோ பதிவுகளுக்காகவும் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டிருப்பவர். இதன்காரணமாகவே, 2019 ஹரியானா சட்டமன்றத் தேர்தலின்போது, ஆதம்பூர் தொகுதியில் சோனாலியை பாஜக வேட்பாளர் ஆக்கியது. ஆனால்,30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்மக்கள் அவரைத் தோற்கடித்து விட்டனர்.எனினும், ஹரியானாவில் பாஜக ஆட்சி நடப்பதால், ஊருக்குள் அதிகாரமாகவே வலம் வந்து கொண்டிருந் தார்.அந்த வகையில் ஆய்வு மேற்கொள்கிறேன் என்ற பெயரில், ஹிசாரில் உள்ள வேளாண் உற்பத்தி சந்தைக்குச் சென்றசோனாலி போகட், அந்த சந்தையின் அதிகாரி சுல்தான் சிங்கை, செருப்பை கழற்றி, பல பேர் முன்னிலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். அடிக்க வேண்டாம் என்று அதிகாரி எவ்வளவோமன்றாடியும் சோனாலி அவரை விடவில்லை.
இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், சுல்தான் சிங் தன்னிடம் தவறாக பேசியதாக, சோனாலி திடீரென போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரும்அவரின் புகாரை ஏற்றுக்கொண்டு, அதிகாரி சுல்தான் சிங் மீதே வழக்கு போட்டுள்ளனர்.இந்நிலையில், ஆதம்பூர் தேர்தலின்போது தனக்கு ஏன் ஆதரவளிக்கவில்லை என்று கேட்டே, சோனாலி போகட் தன்னைத் தாக்கியதாக அதிகாரி சுல்தான் சிங் கூறியுள்ளார்.