tamilnadu

img

பாஜக எம்.பி. சன்னி தியோல் பதவி பறிபோகிறதா?

புதுதில்லி:
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், தேர்தல் செலவினங்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 70 லட்சம் வரை செலவழிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. அதற்கு மேல் செலவழிப்பது, விதிமுறைகளை மீறியதாக கருதப்படும்.
அந்த வகையில், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றபாஜக வேட்பாளரும், நடிகருமான சன்னி தியோல், ரூ. 70 லட்சத்திற்கும் அதிகமாக செலவிட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவரது தேர்தல் செலவின அறிக்கையை மாவட்ட தேர்தல்அதிகாரி, தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் சன்னி தியோல், 78 லட்சத்து51 ஆயிரத்து 592 ரூபாய் செலவழித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அனுமதிக்கப் பட்ட தொகையைவிட 8 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் அதிகமாக செலவழித்திருக்கிறார் சன்னி தியோல்.  இதனால் சன்னி தியோலின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.