tamilnadu

img

நடிகர் சோனு சூட்டிடம் உதவிகேட்ட பாஜக எம்எல்ஏ....

மும்பை:
இந்திய சினிமாவில் பிரபலவில்லன் நடிகராக வலம்வருபவர் சோனு சூட். தமிழில் அருந்ததி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்தவர்.

கொரோனா நெருக்கடியை ஒட்டி, ஒரு ஹீரோவைப் போலகளத்தில் இறங்கிய அவர், ஊரடங்கால், வீடு திரும்ப முடியாமல்மும்பையில் மாட்டித் தவித்த நூற்றுக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை, அவர் களின் சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசம், பீகார், கர்நாடக மாநிலங்களுக்கு தனது கைப் பணத்தை செலவிட்டு அனுப்பி வைத்தார். இதற்குரிய அனுமதியையும் அவர் மாநில அரசுகளிடம் போராடிப் பெற்றார்.“கடைசி புலம்பெயர் தொழிலாளி, அவரது குடும்பத்தோடு சேரும்வரை, இந்தப் பணியைத் தொடர்ந்து செய்வேன்” என்று கூறிய அவர், சொன்னபடியே தற்போதும் உதவி வருகிறார்.

இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநில, பாஜக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏ-வுமான ராஜேந்திர சுக்லா-வே நடிகர் சோனு சூட்டிடம் உதவி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.“சோனு சூட் ஜி..எங்கள் பகுதி தொழிலாளர்கள் சுமார் நூறு பேர் மும்பையில் ஊரடங்குகாரணமாக ஊருக்கு வர முடியாமல் தவிக்கின்றனர். அவர்களைசாத்னா அனுப்பி வைக்க உதவுங்கள். ப்ளீஸ் ஹெல்ப் அஸ்’ என்று டுவிட்டர் பக்கத்தில் சுக்லாவேண்டுகோள் விடுத்துள்ளார். சோனு சூட்டும், அவருக்கு “உதவுகிறேன்”’ என பதில் அளித்துள்ளார்.இதையடுத்து, மத்தியப்பிரதேச அரசாங்கத்தையே கையில் வைத்திருக்கும் ஒரு ஆளும்கட்சி எம்எல்ஏ, தொழிலாளர் களை மீட்க ஒரு நடிகரிடம் உதவிகேட்க வேண்டிய அளவில்தான் சிவராஜ் சிங் தலைமையிலான அரசு இருக்கிறதா? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.