tamilnadu

img

பண்ணைவீட்டில் பாலியல் தொழில் நடத்திய பாஜக தலைவர்? 12 பேரை கைது செய்து ஆக்ரா போலீஸ் அதிரடி

ஆக்ரா:
ஆக்ராவில் பாஜக தலைவர் அசோக் ராணாவின் ‘கமலா’ பண்ணை வீட்டில்,நீண்டகாலமாக நடந்துவந்த பாலியல்தொழில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இந்த பண்ணை வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து அங்கிருந்த 3 பெண்கள், 9 ஆண்கள் என 12 பேரைக் கைதுசெய்துள்ள ஆக்ரா போலீசார், பாஜகதலைவர் ராணா மீதும் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

இதுதொடர்பாக ஆக்ரா காவல் துறை (SSP) கண்காணிப்பாளர் பப்லுகுமார், செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “உத்தரப்பிரதேச மாநிலம்முழுவதும் பாலியல் தொழில் செய்பவர்களை பிடிக்க போலீசார் சோதனை நடத்தினர். அதன் ஒருபகுதியாக நடத்தப்பட்ட சோதனையிலேயே, பாஜகவின் ஆக்ரா மாவட்ட முன்னாள் தலைவர் அசோக் ராணாவின் பண்ணை வீட்டிலும் பாலியல் தொழில் நடந்து வந்ததுகண்டுபிடிக்கப்பட்டு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ராணாவின் ‘கமலா’ பண்ணை வீட்டிலிருந்து, பல்வேறு ஹோட் டல்களுக்கு செல்லத் திட்டமிருந்த கொல்கத்தாவைச் சேர்ந்த மீம், பாயல், மாயா ஆகிய 3 பெண்கள் மற்றும் விஜய், ராம், ஜெய்வர்தன் சிங்,ராஜேஷ் சிங், சச்சின், பிரேம், பிரதீப்,ரன்வீர், விஷ்ணு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறியிருக்கும்பப்லு குமார், இந்த சம்பவத்தில் சில பெரிய மனிதர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதால், கைதானவர்களிடம் அதுபற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் குறிப் பிட்டுள்ளார்.

இதனிடையே, தனது ‘கமலா’ பண்ணைவீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்திய பாஜக மாநிலத் தலைவர் அசோக் ராணா, தன் மீது வேண்டுமென்றே குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பழியைத் தூக்கி போலீசார் மீது போட்டுள்ளார். மேலும் பண்ணை வீட்டை வாடகைக்குத்தான் விட்டிருந் தேன் என்றும் தப்பிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.