மும்பை, ஏப்.16-பாலிவுட் நடிகை ஊர் மிளா மடோன்கர், வடக்கு மும்பை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதையொட்டிதீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ஊர்மிளா,தனது பிரச்சாரத்தின் போது பாஜகவினர் இடையூறு செய்கின்றனர்; அநாகரிகமாக ஆடுவதுடன், அவதூறாகப் பேசுகின்றனர் என்று புகார் தெரிவித்துள்ளார். மேலும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.